காட்டுநாயக்கன்

நீலகிரி மாவட்டம் பண்டைய பழங்குடிகளில் காட்டுநாயக்கரும் அடங்குவர். இவர்கள் வயநாடு, நீலகிரி போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றனர். அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இயற்கையோடு இயற்கையாக ஒன்றிணைந்து எளிமையான முறையில் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றார்கள். இவர்களை ”காட்டின் ராஜா” என்றும் “காட்டுக் குறும்பர்“ என்றும் அழைக்கின்றனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் 40 முதல் 50 ஊர்களில் வசித்து வருகின்றார்கள். கடந்த 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடிப்படையில் இவர்களின் எண்ணிக்கை 2480 ஆக இருக்கிறது.

காட்டுநாயக்கர்களின் கலைப்பொருள்கள்