காட்டுநாயக்கன் இனவரைவியலின் சுயவிபரம்

 

இருப்பிடம் மற்றும் சுற்றுச்சூழல்

பண்டையக் காலத்தில் முதுமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் பரவலாக வாழ்ந்து வந்தார்கள். காட்டுநாயக்கன் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டான். இவர்கள் வாழும் இருப்பிடங்களை ”பாடி” என அழைக்கின்றனர். மலைப் பகுதியில் கிடைக்கும் மூங்கிலையும், புல்லையும் கொண்டு மண்ணால் வீடு கட்டிக்கொள்கின்றனர். ஒரே வீட்டில் குறைந்தது நான்கு முதல் ஆறு குடும்பங்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

 

மொழி

இவர்கள் பேசும் மொழி காட்டுநாயக்கன் மொழியாகும். இம்மொழி தென்திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை. கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்மொழி இப்பகுதியில் கலப்படமாக பேசப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு எழுத்து வடிவம் இல்லாமல் பேச்சு வழக்கு மட்டும் உள்ளது. இவர்களின் பேச்சில் மலையாளம் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.

 

உருவத்தோற்றம்

பெரும்பாலும் ஆண்கள் கருப்புத்தோலுடன் குட்டையான, தடித்த உதடு, அகலமான மூக்கு, அடர்த்தியான தலைமுடியும் கொண்டுள்ளனர். பெண்கள் கொண்டைப் போட்டு காணப்படுவார்கள்.

 

பாரம்பரிய பழக்கவழக்கம்

இம்மக்களின் பழக்க வழக்கம், வாழும் முறை, பண்பாடு ஆகியவை விசித்திரமாவை. பண்டைய காலத்தில் ஓரிடத்தில் நிலையாக வாழ்வது கிடையாது. தேன் சேகரிப்பது இவர்களின் பராம்பரிய பழக்கமாக உள்ளது. குறுமிளகு மற்றும் காப்பி தோட்டங்களில்  தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். கால்நடையில் நாய் மட்டும் வளர்க்கிறார்கள்.

 

உணவுமுறை

வனத்தில் இருக்கும் காட்டுக் கிழங்குகள், தினை வகைகளை அதிக அளவில் உண்பார்கள். அசைவ உணவை விரும்பி உண்பர்.

 

கலை மற்றும் இசை

தேன் இருக்கும் இடத்தை அறியும் வல்லமை கொண்டவர்கள். வேளாண்மை செய்ய கற்றுக் கொண்டு குறுமிளகு, காப்பி போன்றவற்றை பயிரிடுகின்றனர். யானையை வளர்ப்பிலும் திறன் படைத்தவர்கள். இசையை சிறியவர் முதல் பெரியவர் வரை இசைப்பார்கள். இக்கருவிகளான புல்லாங் குழல், மேளம் முக்கிய இடம்பெறும்.

 

பொருளாதாரச் செயல்பாடு

குறுமிளகு, காப்பி கொட்டை, தேன் மற்றும் வேளாண் பொருள்களை விற்று பணம் ஈட்டி வருகின்றனர்.

 

பண்புகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்

தற்போது அரசு இவர்களுக்கு நிலங்கள் தந்துள்ளது. அதில் பசுமை வீடுகளும் குடிநீர் வசதியும் ஏற்படுத்தி தந்துள்ளது.