தோடர்களின் பூத்தையல் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தோடர் இன மக்களின் “பூத்தையல்” மிகவும் பிரசித்தமானது. வெள்ளை நிறப் பருத்தி துணியில் கருப்பு மற்றும் சிவப்பு நிற நூல்களைக் கொண்டு பூத்தையல் வேலையினை கைகளால் பின்னுகிறார்கள். பூத்தையல் இயற்கைச் சார்ந்த வடிவமைப்புடன் உருவாக்குகின்றனர். பெண்களின் பூத்தையல் வடிவமைப்பிற்கு “புவிசார் குறியீடு” கிடைத்துள்ளது. மேலும் 2020-ஆம் ஆண்டு பூத்தையல் வேலைப்பாட்டில் சிறந்து விளங்கும் இரு பெண்களுக்கு “நாரிசக்தி புரஸ்கார்” விருதும் கிடைத்துள்ளது.