தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பழங்குடியினர் இருளர். இருளா என்ற பெயர் ‘இருள்’ அல்லது ‘இரவு’என்று பொருள்படும். இருளர்களை கசவர், இருளப் பள்ளர் அல்லது மலைதேச இருளர்கள் என்று அழைக்கின்றனர். நீலகிரியில் மொத்தம் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வருகின்றனர். இருளர்களுக்கு 12 குலங்களும், துணைப் பிரிவுகளும் உண்டு. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இருளர்கள் 6,020 பேர் உள்ளனர்.