பண்டையக் காலத்தில் பாறைகளில் ஓவியங்களை வரைந்து வந்துள்ளனர். ஆலு குறும்பர்கள் ஓவியக் கலையில் சிறந்து விளங்குகின்றார்கள். ஓவியம் வரைவதற்கு இயற்கையாக கிடைக்க கூடிய வேங்கை மரத்தின் பாலில் போதுமான அளவு தண்ணீரைச் சேர்த்து மஞ்சள், கருமை வண்ணங்களையும்; கட்டகிடாய் இலையின் சாறிலிருந்து பச்சை வண்ணத்தையும் சேகரிக்கிறார்கள். இவ்வண்ணங்களை கொண்டு ஆலு குறும்பர்களின் வாழ்வியல் முறைகளான, திருமண நிகழ்வு, நடனமாடுதல், பண்டிகைகள், சீர்செய்தல், விவசாயம் செய்தல், தேன் எடுத்தல், கடவுள் வழிபாடு மற்றும் வீட்டின் அமைப்பு ஆகியவற்றை வண்ண ஓவியமாக வரைகின்றனர்.