தோடர்கள்

நீலகிரி மாவட்டத்தில் வாழும் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடிகளில் தோடர் இன மக்களும் ஒருவராவர். இவர்கள் தங்களைத் தொதுவர் அல்லது தோடர் என்றும் அழைக்கின்றனர். இவர்கள் மண்ணிண் மைந்தர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 67 கிராமங்களில் மட்டுமே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் கிராமத்தினை “மந்து”என்று அழைக்கப்படுகிறது. தலைகுந்தாவிற்கு அருகில் அமைந்துள்ள “முத்துநாடு மந்து”இவர்களுக்கு தலைமையிடமாக கருதப்படுகிறது. தோடர்களின் மொழிக்கு எழுத்து வடிவம் ஏதும் கிடையாது. இவர்கள் மரபுபடி சைவ உணவையே உண்பர். இவர்களின் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் எருமை மற்றும் வேளாண்மை சார்ந்தே இருக்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 1608 பேர் உள்னர்.

 

தோடர்களின் கலைப்பொருள்கள்