கோத்தர்களின் குலத்தொழில் இரும்பு பட்டறையை செய்தல். தச்சு தொழில், விவசாயம், வீடு கட்டுதல், வெள்ளி ஆபரணங்கள் செய்யும் பொற்கொல்லர்களாகவும் விளங்குகின்றனர். பழங்குடி இனத்தவர்களில் கோத்தர் இனப்பெண்கள் மண்பாண்டம் செய்வதில் சிறந்து விளங்குகிறார்கள். திருவிழா காலங்களில் பொங்கல் வைப்பதற்கு புதியதாக செய்யப்பட்ட மண்பானையில் தான் பொங்கல் வைத்து வழிபாடுவார்கள். பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் மண்பானைதான் உபயோகிக்கப்படுகிறது.